'மாணவர்கள் பயிலும் போதே உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பணி வாய்ப்பு பெற்று தருவது விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி' என தாளாளர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் இ.எஸ்., கல்விக்குழுமம் தாளாளர் மற்றும் செயலாளர் செல்வமணி கூறியதாவது:ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் பயின்றால், ஆண்டுக்கு 1.80 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறலாம். பழகுநர் பயிற்சியோடு அல்லாமல், நிரந்தர பணியிலும் சேரலாம்.
கடந்த 40 ஆண்டுகளில் இக்கல்லுாரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிலதிபர்களாகவும், அரசு பணியாளர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பணியிலும் சேர்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.இங்கு, தொழிற்கல்வி அரசு பாடதிட்டத்தோடு, தொழில் நிறுவனங்களின் தொழிற் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, மாணவர்கள் பயிலும் போதே அந்த நிறுவனங்களில் இன்பிளான்ட் பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர். 3டி அனிமேஷன், கிராபிக்ஸ் பயின்ற மாணவர்கள் செய்தித்துறை, சினிமா துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.மின்னியல் பிரிவு மாணவர், தற்போது சந்திராயன் 3 இயக்க இயக்குனராக உள்ளார். சிவில் துறை மாணவர்கள் 100 சதவீதம் சிறப்பு நேர்காணல் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிநியமன ஆணை பெற்றுள்ளனர்.பெண்களுக்கு சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் பணி நியமன உத்திரவாதம் வழங்கப்படுகிறது.
கடந்த 2018-19ம் ஆண்டு ஜப்பான் மின்னியல் தொழிற்சாலையில் தேர்வாகி, பணி நியமன ஆணை பெற்றனர். இவர்களுக்கு விசா, கலெக்டர் மூலம் வழங்கப்பட்டது.
டெக்சாஸ் மாகாணத்தில் இ.எஸ்., கல்வி குழுமத்தில் உள்ள இ.எஸ்.எஸ்.எம்., இனோவேடிவ் டெக்னாலஜிஸ் எல்.எல்.சி., மூலம் உலகில் தற்போதைய மென்பொருள் தொழில்நுட்பத்தில் பயன்படுத்துவதை போல, தமிழகத்தில் அறிமுகம் செய்து பாட திட்டத்தை கடந்து பயிற்சி அளிக்கப்படுவதால், மாணவர்கள் சுலபமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.இவ்வாறு செல்வமணி கூறினார்.