ஸ்ரீலட்சுமி வித்யாலயா கல்வி நிறுவனத்தில் 27 ஆண்டு கால கல்விப் பணியில் மற்றும் ஒரு அங்கமாக சி.பி.எஸ்.இ., லட்சுமி வித்யாஷ்ரம் பள்ளி வெற்றி நடைபோடுகிறது.
மாணவிகள் சேர்க்கை மட்டுமே நடைபெற்று வந்த நிலையில்,மாணவர்களின் நலன் கருதி இந்த கல்வியாண்டு முதல் மாணவிகளுக்கு மட்டும் என்ற நிலை மாறி, 7ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் என இருபாலர் சேர்க்கையையும் நடத்த மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
பிளஸ் 1 வகுப்பு மாணவிகள் சேர்க்கையில், 1. மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், 2. மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி, 3. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், 4. எக்கனாமிக்ஸ், அக்கவுண்டன்சி, அப்ளைடு மேத்தமேடிக்ஸ், பிசினஸ் ஸ்டடீஸ் என நான்கு பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.
அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய காற்றோட்ட வசதியுடன் கூடிய பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், பஸ் வசதி, திறமையான அனுபவமிக்க ஆசிரியர்கள் என அனைத்து அடிப்படை அம்சங்களையும் ஒருங்கே பெற்றுள்ளது லட்சுமி வித்யாஷ்ரம் பள்ளி.ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சியும், போட்டித் தேர்வுகளில் தயக்கமின்றி எதிர்கொள்ள மாணவர்களை தயார் படுத்தி வருகிறோம்.இவ்வாறு ராஜாசுப்ரமணியம் கூறினார்.