திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
நவீன ஆய்வுக்கூடங்கள், நுாலகங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய காற்றோட்டமான வகுப்பறைகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் ஸ்போக்கன் இங்கிலீஷ், பஸ் வசதி என மாணவர்களின் நலனில் தனி கவனம் செலுத்தி 100 சதவீத தேர்ச்சிக்கு வழிவகுக்கிறது.அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பெற்று சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்கள் கல்வி நிறுவனம், மாணவர்களின் உயர் படிப்புக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.
மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள், கட்டுரை, கவிதை போட்டிகள் என மாணவர்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.குறைந்த செலவில் நிறைவான கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு கொடுக்கும் மையமாக கல்லுாரி செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் சிறந்த கல்லுாரி என்ற அந்தஸ்தைப் பெற அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேராசிரியர்களின் உழைப்பும், சேவை மனப்பான்மையுமே காரணம்.இவ்வாறு செல்வராஜ் கூறினார்.