'டி.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, வேலை வாய்ப்புகளை பெற்றுத் தர முக்கியத்துவம் அளிக்கும்' என கல்லுாரி செயலாளர் அசோக்குமார்ஜெயின்,சேர்மன் மனோகர்குமார் சுரானாதெரிவித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், மேலுார் அருகே 36 ஏக்கர் பரப்பளவில் இயற்கை சூழலில் டி.எஸ்.எம்., ஜெயின் பொறியியல் கல்லுாரி இயங்கி வருகிறது. டில்லி ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்று, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இக்கல்லுாரி, கடந்த 22 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்படுகிறது.
திறமையான பேராசிரியர்களை கொண்டு தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. நவீன ஆய்வுகூடங்கள், அதிகளவு புத்தகங்கள் நிறைந்த சிறந்த நுாலகம் உள்ளது. கற்றல் மட்டுமின்றி விளையாட்டிலும் சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் நிர்வாகம் மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
கிராமப்புற மாணவர்களும் தரமான கல்வி பயிலும் நோக்கில் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆண், பெண் என தனித்தனி விடுதிகள் உள்ளன. சைவ உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது.
இங்கு பயின்ற மாணவர்கள் அரசு மற்றும் பிற துறைகளில் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவங்களிலும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். சமுதாயத்தில் சிறந்த பொறியாளர்களை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் செயல்படும் கல்லுாரியாக டி.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி செயல்படுகிறது.இவ்வாறு மனோகர்குமார் சுரானா, அசோக்குமார்ஜெயின் கூறினர்.