ஊட்டி:'பசுமை தமிழகம்' திட்டத்தில் வனப்பரப்பை அதகரிப்பது குறித்து, ஊட்டியில் பல்வேறு அரசு துறைகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி 'தமிழகம்' விருந்தினர் மாளிகையில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில், 'பசுமை தமிழகம்' திட்டத்தில், வனப்பரப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசுகையில்,''2030--31ம் ஆண்டுக்குள் தமிழக வனப்பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து துறை ஒருங்கிணைப்புடன், 2.50 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு, பணி நடந்து வருகிறது. அனைத்து துறையின் ஒருங்கிணைப்பு அவசியம் என்பதால், ஒவ்வொரு துறையும், தற்போதுள்ள காலி இடங்கள் குறித்த விபரத்தை ஜூன் 10ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்,'' என்றார்.கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலர் சச்சின் உட்பட பலர் பங்கேற்றனர்.