வாய்ப்புகளை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்!
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கோவை: கோவையில், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், 'இன்போசிஸ்' மனித வள மேம்பாட்டு பிரிவு அதிகாரி மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் சுஜித்குமார் வேலைவாய்ப்பு திறன்கள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

அவர் பேசியதாவது: துறையை காட்டிலும், சரியான கல்லுாரியை தேர்வு செய்வது முக்கியம். அதிக போட்டிகளுக்கு அனுமதிக்கும் கல்லுாரிகள், மன்றங்கள், ஹேக்கத்தான் உள்ளிட்ட பாடங்கள் தாண்டிய நிகழ்வுகளை ஊக்குவிக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்வதில் எவ்வித பலனும் இல்லை. நாம் படிப்பது வாழ்நாளில் எப்போதும் பயன்படும் வகையில் இருக்கவேண்டும். படிப்பதற்கும் கற்றலுக்கும் வேறுபாடுகள் உண்டு; அதை உணர்ந்து செயல்படவேண்டும். எதிர்காலத்தில் அதிக வாய்ப்புகளை அளிக்கும் துறையை தேர்வு செய்யவேண்டும்.வேலைவாய்ப்பை மையமாக கொண்டு படிக்காமல், அறிவை மேம்படுத்திக்கொள்ள படிக்க வேண்டும். கல்லுாரி காலங்களில் எங்கு எந்த போட்டிகள், நிகழ்ச்சிகள் நடந்தாலும் வாய்ப்புகளை பயன்படுத்த தயங்கவேண்டாம்.

அதிக பங்கேற்பு தன்னம்பிக்கையை விதைத்து விடும். நேர்மறை அணுகுமுறை, ஆங்கிலம் உள்ளிட்ட பல்மொழி தொடர்பு திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகிய மூன்றையும் மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டும். வேலைவாய்ப்பு என்பது ஏராளமாக உள்ளது. திறன்களை வளர்த்தால் போதுமானது. பொறியியல் பாடப்பிரிவில் அதிக வாய்ப்புகள் உள்ளன; அதுசார்ந்து வரும் எதிர்மறை கருத்துக்களை நம்பவேண்டாம். இவ்வாறு, அவர் பேசினார்.

தேசிய அளவில் 80க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள்
கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசியதாவது:தற்போது உலகளாவிய வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். திறன்களை வீணடித்த பின் வெற்றியை எதிர்பார்க்க முடியாது. குறைந்த கட்டணத்தில், தரமான கல்வி பெறும்போதே அது முறையான கல்வியாகிறது. அனைவரும் திறன் மிக்கவர்களே.

ஆனால், அவர்களின் திறன் அறிந்து கல்வி கிடைப்பதில்லை. போட்டிகளை தாண்டி அனைவரும் வெற்றி பெறலாம். வேலைக்காக மட்டும் கல்வி இல்லை. தொழில்நுட்பங்கள் மாறிவிடுகின்றன. அதற்கேற்றார் போல், நாம் மாறுவது அவசியம். நிகழ்காலத்தில் செய்ய வேண்டியதை சரியாக செய்தாலே எதிர்காலம் நன்றாக இருக்கும். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் தோல்வியை தரும். அரசு கல்லுாரிகளில் இன்ஜி., தவிர, பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் பெற்றால் கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவில், 80க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் உள்ளன. அவற்றின் மூலம் வெற்றி பெறலாம். ஆராய்ச்சி துறையில் வெற்றி வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. சரியான துறையை தேர்ந்தெடுப்பது மட்டுமே நம் பணி. நுழைவுத்தேர்வுகள் மூலம் அனைத்து கல்விகளுக்கும் தேவையான கல்வி உதவித்தொகையை பெற முடியும். மாநில கல்வியில் பயின்றால் உயர்கல்வியில் சாதிக்க முடியாது என்பது தவறு. இவ்வாறு, அவர் பேசினார்.

எலக்ட்ரிக் வாகன துறையில் கொட்டிக்கிடக்குது வாய்ப்பு!
எலக்ட்ரிக் வாகனம் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் எதிர்கால வாய்ப்புகள் குறித்து தொழில்துறை வல்லுநர் செந்தில்ராஜா பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அசுரவேகத்தில் உள்ளது. நாம் அறியாமலேயே அபரிமிதமாக வளர்ந்துள்ள துறை போக்குவரத்து. எலக்ட்ரிக் வாகனங்களே நாட்டின் எதிர்காலமாக இருக்கும்.

பல முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ந்த கண்டுபிடிப்புகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன.எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் பல்வேறு சவால்கள் உள்ளன. வாகன வடிவமைப்பு, பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, சார்ஜிங் பாய்ண்ட், சார்ஜிங் வேகமும், மைலேஜ் என பல்வேறு தரப்பில் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. அத்துறையில் நம் திறன்களை மேம்படுத்திக்கொண்டால் சிறப்பான எதிர்காலம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் தற்போதைய மதிப்பு, 1,434 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, 2027 ஆண்டில், 15 ஆயிரத்து 397 கோடி ரூபாயாக உயரும். தற்போதுள்ள பெட்ரோல் பங்க் போன்று, 15 ஆண்டுகள் கழித்து, 'சார்ஜிங் ஸ்டேஷன்' காணும் இடமெல்லாம் இருக்கும். அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம் சார்பில் சார்ஜிங் தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவின் கீழ் வாகனங்கள் வடிவமைப்பு, சைபர் பாதுகாப்பு, பேட்டரி டெக்னாலஜி, ஆட்டோமொபைல் என பல்வேறு துறைகள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் இத்துறையை தாராளமாக தேர்வு செய்து படிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

தொழில் துறை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோருக்கு வாய்ப்பு
கோவை ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி துணை முதல்வர் கருப்புசாமி பேசியதாவது:வாழ்வின் முதல்படியை துவங்க உள்ளீர்கள். அடுத்து வரும், 3 - 5 ஆண்டுகள் முக்கியம். இந்த காலகட்டத்தில் கடினமாக உழைத்தால், அடுத்த, 40 ஆண்டுகளுக்கு வளமான வாழ்வு கிடைக்கும். நிலையான இலக்கை நிர்ணயித்து அதை செயல்படுத்த வேண்டும். இன்ஜி., படிப்புகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

ஆனால், படிக்கும்போதே திட்டமிடல் இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலக்கை அடைய திட்டமிடல் மட்டுமே உதவும். இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம். தொழில்நுட்பம் வளர்வதாலும், போட்டி நிறைந்த உலகில் தொடர் திறன் மேம்பாடு இருந்தால் மட்டுமே, முன்னேற்றம் இருக்கும். தொழில்துறையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சிக்கல்களை தீர்க்கும் மாணவர்களுக்கே இன்று வாய்ப்புகள் அதிகம். அறிவு இருந்தால் மட்டும் போதாது.

திறன் மேம்பாடும் அவசியம். பாடத்தை மட்டும் படிக்காமல் அதை செயல்படுத்தும் அறிவும் வேண்டும். வகுப்பறையில் பாடங்களை கற்பதுடன், அனைத்து துறை அறிவையும் வளர்த்துக் கொள்வது அவசியம். புரெபஷனல் திறன்களை வளர்த்துக் கொண்டால் வேலைவாய்ப்புகள் பிரகாசமடையும். இவ்வாறு, அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X