பெங்களூரு ஸ்டைலில் மாறுகிறது கோவை! 'ஸ்மார்ட் ரோடு', 'பெய்டு பார்க்கிங்' எல்லாம் உண்டு
Updated : மே 25, 2022 | Added : மே 25, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: பெங்களூரு ஸ்டைலில், கோவையில், 'ஸ்மார்ட் ரோடு' மற்றும் 'ஸ்மார்ட் பார்க்கிங்' சிஸ்டம் உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள், பெங்களூரு சென்று வந்துள்ளனர்.



'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில், பல கோடி ரூபாய் செலவழித்து, 'மாடல் ரோடு' உருவாக்கப்பட்டது. கோடிக்கணக்கில் செலவழித்தும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. வழக்கமான சாலையாக காட்சி அளிக்கிறது.



latest tamil news



தற்போது ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்ட சாலை, 'மாடல் ரோடாக' மாற்றப்படுகிறது. பசுமை பரப்பு அழிக்கப்பட்டு, கான்கிரீட் கற்களால் நடைபாதை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆங்காங்கே ஊஞ்சல் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக ரீதியாக விளம்பரம் செய்து, வருவாய் ஈட்டும் வகையில் வரிசையாக டிஜிட்டல் பலகைகள் நிறுவப்பட்டு இருக்கின்றன.



மோட்டார் இல்லாத நடைபாதை



அடுத்த கட்டமாக, பெரிய கடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் ரோட்டில், மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கான நடைபாதை உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. ரேஸ்கோர்ஸ் மற்றும் டி.பி.ரோட்டில் செய்தது போல் இல்லாமல், 'ஸ்மார்ட் ரோடு' உருவாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா தலைமையில் உதவி பொறியாளர் சரவணக்குமார், விமல், கவுன்சிலர்கள் சுமா, முனியம்மாள் ஆகியோர் பெங்களூரு சென்றனர். அங்குள்ள சாலைகளில் பாதசாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகள், ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்த வசதி மற்றும் அறிவுசார் மையத்தின் செயல்பாடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, திரும்பியுள்ளனர்.






இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூருவைப் போல், குடிநீர், பாதாள சாக்கடை குழாய், தொலைத்தொடர்பு ஒயர்கள் கொண்டு செல்ல தனித்தனி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். மழை நீர் வழிந்தோட வழியேற்படுத்தப்படும்.அங்கு, 'ஸ்மார்ட் பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை ரேஸ்கோர்சில், 'பெய்டு பார்க்கிங் சிஸ்டம்' செயல்படுத்த, ஆலோசித்து வருகிறோம். ஆர்.எஸ்.புரத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் செயல்பாட்டுக்கு வரும்போது, டி.பி.ரோட்டில் நிறுத்த தடை விதிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மே-202214:36:09 IST Report Abuse
அக்கப்போர் நீங்க வேற...சென்னையையும் இப்படிதான் ஒரு 5-6 வருஷம் முன்பு சொன்னார்கள்...சென்னை சிங்கப்பூர் மாதிரியா இருக்கு??
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-மே-202214:20:56 IST Report Abuse
Natarajan Ramanathan என்னதான் முயற்சி செய்தாலும் கோவை பெங்களூரு மாதிரி எல்லாம் ஆகவே முடியாது. முதலில் அடாவடி செய்யும் ஆட்டோவை கூட கட்டுப்படுத்த வக்கில்லாத அரசு ஒழிய வேண்டும்.
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
25-மே-202213:55:09 IST Report Abuse
Kundalakesi கோயம்புத்தூரில் வாழ காசு கொடுக்க வேண்டும். இலவசமாக இருந்த சேவைகளை இப்பொழுது காசு பிடுங்கி தரபோராங்க. சரி சாலை யாவது நல்லா போடுவீங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X