விழுப்புரம் அருகே 2,000 ஆண்டு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரம் அருகே 2,000 ஆண்டு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
Latest district News

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகள் மற்றும் சுடுமண் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், பேரங்கியூர், பிடாகம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.அங்கு, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும் .

இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் கருப்புநிற பானை ஓடுகளின் தோள் பகுதிகளில் பள்ளவரி எனப்படும் அலங்கார கோடுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பானை ஓடுகள் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையவை.

தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு ஆய்வில், மண்ணால் ஆன சுடுமண் தண்ணீர் குழாயின் ஒரு பகுதி, மிகச் சிறிய மட்கலயம், மட்கலய மூடி, சுடுமண் தக்களி, சுடுமண் கெண்டியின் மூக்குப் பகுதி, உடைந்த சுடுமண் கலயத்தின் விளிம்புப் பகுதி ஆகியவை கண்டறியப்பட்டன.

இந்த சுடுமண் பொருட்கள், பானை ஓடுகளின் காலத்தைச் சேர்ந்தவை. விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால், மேலும் பல சான்றுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X