துார்வாரும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது: அமைச்சர் மகேஷ் | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
துார்வாரும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது: அமைச்சர் மகேஷ்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

தஞ்சாவூர்: ''துார்வாரும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது,'' என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், தாட்கோ சார்பில் பயனாளிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 10 பள்ளி புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழாவில் பங்கேற்ற அமைச்சர் மகேஷ், நிருபர்களிடம் கூறியதாவது; மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ள நிலையில், கல்லணையில் இருந்து, மே 27 அல்லது 28ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இது குறித்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வரும்.தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, போர்க்கால அடிப்படையில் நடைபெறும் துார்வாரும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

திருவையாறு தொகுதியில் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் துார்வாரும் பணி நடைபெறுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், 11.75 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X