களிமேடு தேர் விபத்து வாக்குமூலங்கள் பதிவு | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
களிமேடு தேர் விபத்து வாக்குமூலங்கள் பதிவு
Added : மே 25, 2022 | |
Advertisement
 



தஞ்சாவூர் : களிமேடு விபத்தில் காயமடைந்தவர்களிடம் ஒரு நபர் குழுவினர் நேற்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர்.



தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த ஏப். 27 அதிகாலை அப்பர் மடம் தேர் திருவிழாவின் போது மின் கம்பியில் தேர் உரசி 11 பேர் இறந்தனர்; 24 பேர் காயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக தமிழக அரசு சார்பில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 30ம் தேதி ஒரு நபர் குழுவினர் தேரை பார்வையிட்டு களிமேடு கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கிராம மக்கள் அரசு துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக நேற்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த குமார் ஜெய்ந்த் காயமடைந்தவர்களில் 19 பேரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்று கம்ப்யூட்டரில் பதிவு செய்தார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இவ்விசாரணை நடந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X