லால்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
Added : மே 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், மேலன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று (25ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது.



திருச்சி, லால்குடி, சுந்தரராஜ பெருமாள் கோவில்108 வைணவ திருத்தலங்களில் 4வது ஸ்தலமாகும். இங்கு ஆண்டுதோறும், வைகாசி விசாகத்தில் இங்குதேரோட்டம் வெகு சிறப்பாக நடந்துள்ளது. ஆனால், பல நூறு ஆண்டுகளை கடந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக திருத்தேர் நிறுத்தப்பட்டு, தேர் நிலையில் நின்றபடியே செல்லரித்தும் போய்விட்டது. இதனால் அன்பில் கிராம மக்கள் ஒன்று திரண்டு, 45 லட்ச ரூபாய் செலவில் புதிய தேர் ஒன்றை உருவாக்கினர்.

கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக செய்யப்பட்ட திருத்தேரின் வெள்ளோட்டம் இன்று (25ம் தேதி) சிறப்பாக நடைபெற்றது. திருத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (25ம் தேதி) திருத்தேரின் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, தக்கார் செல்வராஜ், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர். இக்கோவிலில் வரும் 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை பிரம்மோத்சவம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மோத்சவ விழாவில் 12ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
25-மே-202213:04:09 IST Report Abuse
a natanasabapathy நாத்தீகர்கள் கால் பட்ட கோவில்களுக்கு செல்வதை தவிர்த்து விட வேண்டும் ஏனினில் சாமி கோவிலில் இருந்து ஓடியிருக்கும் இவர்களை பார்த்ததும்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
25-மே-202211:29:50 IST Report Abuse
Duruvesan ஒத்த பைசா குடுக்கல, ஆனா முதல் மரியாதை, கடவுள் இல்லைனு சொல்ற கூட்டம் தேர் இழுக்க, சூடு சொரணை இல்லாத ஹிந்து அடிமைகள் உள்ள வரை தீயமுக கம்பெனிய எவனும் அசச்சிக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X