ஆத்துாரில் நடந்த தி.மு.க., கூட்டத்தால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்துார், செல்லியம்பாளையத்தில், தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நேற்று மதியம், 3:40 முதல், 4:40 மணி வரை முதல்வர் ஸ்டாலின் பேசினார். திறந்தவெளியில் நடந்த கூட்டத்தால், வெயிலில் பெண்கள், முதியோர் அவதிக்குள்ளாகினர். சிலர், மயக்கம் போட்டு விழுந்தனர். அவர்களுக்கு போலீசார் தண்ணீர் கொடுத்து தெளியவைத்தனர். பல ஊர்களில் இருந்து, கட்சி
யினரை தனியார் பஸ், பள்ளி வாகனங்களில் அழைத்து வந்தனர். அந்த வாகனங்கள், ஆத்துார் புறவழிச்சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால், மதியம், 1:00 முதல், மாலை, 6:00 மணி வரை, சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால்,
கட்சியினர், வெளியூரில் இருந்து பல்வேறு வாகனங்களில் சென்ற மக்கள் அவதிக்குள்ளாகினர்.
தவிர, கூட்டம் தொடங்கும் முன்பே, கட்சி துண்டு, வேட்டி அணிந்த பலர்,
நரசிங்கபுரத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளில் குவிந்தனர்.