பென்னாகரம் அடுத்த மஞ்சநாய்கன அள்ளி பஞ்.,க்கு உட்பட்ட நரசிபுரம், நாகமரத்துப்பள்ளம், வருவூரான்கொட்டாய் உள்ளிட்ட பகுதியில் உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கையும் இல்லை எனக்கூறி, உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி பென்னாகரம் தாசில்தார் அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் தாசில்தார் அசோக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போரட்டம் கை
விடப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் சக்கரவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், சிசுபாலன், சோலை அர்ச்சுணன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், ரவி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.