தேன்கனிக்கோட்டை தாலுகா, சந்தனப்பள்ளி அடுத்த தல்சூரை சேர்ந்தவர் நவீன்குமார், 23. ஓசூர் தின்னுாரில் தங்கியிருந்தார்; தன் நண்பர் கார்த்திக் என்பவரின் பிறந்த நாளை கொண்டாட ஊருக்கு சென்றவர், கடந்த, 21ல் இரவு, பிறந்த நாள் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதனால், பேனரை பிக்கப் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, தேன்
கனிக்கோட்டை - சந்தனப்பள்ளி சாலையில் சென்றார்.
தல்சூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரை மீட்ட நண்பர்கள், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இறந்தார். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரிக்கிறார்.