கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்பு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்பு
Added : மே 25, 2022 | |
Advertisement
 


கிருஷ்ணகிரியில் இன்று (25ம் தேதி) நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில், கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி, பால்
வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அதன்படி, இன்று காலை, 10:15 மணி
யளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், 76 குழுக்களுக்கு, 61.27 லட்சம் ரூபாய் மானியம் மற்றும் பயிற்சி தொகை, 60 நபர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ், 10 நபர்களுக்கு தீவன விதை வழங்குதல் நிகழ்ச்சியும், 50 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு கிருஷ்ணகிரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலைய திறப்பு விழா நடக்கிறது.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X