தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காவேரிப்பன்கொட்டாயை ஒட்டிய காப்புக்காட்டில் பதுங்கியுள்ள சிறுத்தை, இரவு நேரங்களில் அப்பகுதி குடியிருப்புகளில் உள்ள கோழி, ஆடுகளை அடித்து கொன்று விட்டு சென்றது. இதுபோன்று அடிக்கடி சிறுத்தை கிராமத்திக்குள் வந்து செல்வதால், கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இதனால் வனத்துறையினர், சிறுத்தை பதுங்கியுள்ள
காப்புக்காட்டை கண்காணித்து வந்தனர். இந்
நிலையில், பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று மாவட்ட வன அலுவலர் அப்பலாநாயுடு, வனச்சரகர் நடராஜன், வனவர் முனுசாமி ஆகியோர் சிறுத்தை நடமாட்டமுள்ள பகுதிக்கு சென்று, அங்கு கூண்டு வைக்கும் இடத்தை ஆய்வு செய்து, அதற்கான
ஏற்பாடுகளை செய்தனர்.