அரசு பஸ் கண்டக்டர் பணியில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் லோகுசாமி, 58. அவர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில், கண்டக்டராக பணியாற்றி வருகிறார். எஸ்.எஸ்.பி., காலனியில், ஈரோடு செல்லும் வழித்தடம் அரசு பஸ்சில் நேற்று பணியில் இருந்தார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருக்கும் போது, மாலை, 3:00 மணியளவில், லோகுசாமி நெஞ்சுவலி ஏற்பட்டு, பஸ்சில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து டிரைவர், உடனடியாக பஸ்சை வழியில் எங்கும் நிறுத்தாமல், பள்ளிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் லோகுசாமியை பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசு போக்குவரத்து பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.