அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயி களுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா, வெண்ணந்துாரில் நடந்தது.
முதல்வர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தபோது, மதியம்பட்டி, தொட்டியவலசு மற்றும் நெ.3 கொமரா
பாளையம் ஆகிய ஊராட்சிகளில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காணொளி காட்சியை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மதியம்பட்டி பஞ்.,சில் நடந்த நிகழ்ச்சியில் அட்மா தலைவர் துரைசாமி பங்கேற்று, விவசாயிகளுக்கு மின்கலத்தெளிப்பான், கைத்தெளிப்பான், வரப்புப் பயிராக உளுந்து விதைகள்,நெகிழிக் கூடைகள், பிளாஸ்டிக் டிரம் மற்றும் வீட்டுக் காய்கறித் தோட்ட விதைகள், உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியில் மற்றும் கால்நடைத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு சம்பத்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.