திங்களூர் அருகே, கல்லுாரி மாணவியை கடத்தி, கட்டாய தாலி கட்டிய வாலிபர் உள்பட மூவரை, போலீசார் கைது
செய்தனர்.
திங்களூர் அருகே கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர், ௧௯ வயது இளம்பெண், சித்தோடு அருகே கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படிக்கிறார். கல்லுாரி செல்ல கருக்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில், நேற்று காலை காத்திருந்தார். அப்போது திங்களூரை சேர்ந்த தேவராஜ், 32, தமிழரசன், 24, ராஜூ, 35, ஆகியோர், டொயோடா குவாலீஸ் காரில்
வந்தனர். மாணவியை வலுக்
கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிடவே, அங்கு நின்றிருந்த சிலர், திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து செயல்பட்ட போலீசார், நிச்சாம்பாளையம் என்ற இடத்தில் காரை மடக்கி பிடித்தனர்.
போலீசார் விசாரணையில், மற்ற இருவர் உதவியுடன் தேவராஜ், காரிலேயே மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அதை மாணவி கழற்றி வீசியதும் தெரிய வந்தது. மாணவி புகாரின்படி, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.