பட்டப்பகலில் மூதாட்டியிடம்
நகை பறிக்க முயன்ற ஆசாமி
பெருந்துறை, மே 25-
பெருந்துறையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம், நகை பறிக்க முயன்ற சம்பவம்,
பரபரப்பை ஏற்படுத்தியது.
பெருந்துறை, தோப்புபாளையத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள், 70; நேற்று காலை, 9:௦௦ மணியளவில் வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவரில் ஒருவன், அம்மணியம்மாள் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றார். உஷாரான அவர், நகையை இரு கைகளால் பிடித்துக் கொண்டு சத்தமிடவே, பைக் ஆசாமிகள் பறந்து விட்டனர். வீட்டு முன் நின்ற மூதாட்டியிடம், நகை பறிக்க முயன்றது, அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல்போன் கடையில்
திருடிய சிறுவர்கள் கைது
அந்தியூர், மே 25-
அந்தியூரில் மொபைல்போன் கடையில் திருடிய, இரண்டு சிறுவர்களை, போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர் ஜி.ஹச்., கார்னரில், தினேஷ்குமார் என்பவர் மொபைல்போன் கடை வைத்துள்ளார். கடந்த மாதம், 28ம் தேதி இரவில், கடை ஷட்டரை உடைத்து, இரண்டு மொபைல்போன், ௧௦ ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. அந்தியூர் போலீசில் களவாணிகளை தேடி வந்தனர்.
இது தொடர்பாக கோவை, ஆலாங்கொம்பை சேர்ந்த, 17 வயது சிறுவன், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அவரது நண்பரான, 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அந்தியூரில் குடும்பத்தினருடன், ௧௭ வயது சிறுவன் வசிப்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் ஈரோடு சிறுவர் சிறார் குழுமத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, கோவை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
கொ.ம.தே.க.,வினர்
பா.ஜ.,வில் ஐக்கியம்
தாராபுரம், மே 25-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்தவர்கள், பா.ஜ.,வில் சேர்ந்தனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மங்கலம் ரவி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், கொங்கல் நகரத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட கொ.ம.தே.,கட்சியை சேர்ந்தவர்கள், தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் நான்கு பேர், பா.ஜ.,வில், தங்களை இணைத்துக் கொண்டனர்.
கடைவீதியில் டூவீலர் மாயம்
ஈரோடு, மே 25-
ஈரோடு கடைவீதியில், நள்ளிரவில் டூவீலர் காணாமல் போனது.
ஈரோடு, மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் கேசவன், 33; ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதியில் உள்ள உறவினரின் கடைக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் யமஹா ஆர்15 பைக்கில் சென்றார். வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்கை, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காணவில்லை. டவுன் போலீசில் புகாரளித்தார். டூவீலரின் மதிப்பு, 70 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது.
கிணற்றுக்குள் விழுந்த லாரி
மொடக்குறிச்சி, மே 25-
பாசூர் அருகே தோட்டத்து கிணற்றில், போர்வெல் போட சென்ற லாரி, கிணற்றில் விழுந்து மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
பாசூர் அருகே பழனிக்கவுண்டன்பாளையம், பறையன்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி மணிவேல்ய இவரது தோட்டத்தில் போர்வெல் அமைக்க, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மோகனப் பிரியா என்பவருக்கு சொந்தமான போர்வெல் லாரி நேற்று வந்தது. திருச்செங்கோட்டை அடுத்த மொளசியை சேர்ந்த ராமசாமி, 58, லாரியை ஓட்டி வந்தார். தோட்டத்துக்கு செல்லும் வழியில் ரத்தினசாமி என்பவருக்கு சொந்தமான, 50 அடி ஆழமுள்ள கிணறு அருகே, பின்புறமாக வண்டியை திருப்பியுள்ளார். அப்போது கிணற்றின் பக்கவாட்டு சுவர் மீது மோதிய லாரி, பின்புறமாக கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியது.
அதிர்ஷ்டவசமாக டிரைவர் ராமசாமி நீச்சல் அடித்து வெளியே வந்து விட்டார்.
தகவலறிந்த மலையம் பாளையம் போலீசார் சென்றனர். மோட்டார் மூலம் கிணற்று தண்ணீரை முழுவதும் வெளியேற்றி லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
டவுன் பஞ்.,ல் ௩வது முறையாக தேர்தல்
அந்தியூர், மே 25-
அந்தியூர் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு கடந்த மார்ச், 4ல் தேர்தல் நடந்தது. கவுன்
சிலர்கள் வராததால் ஒத்தி வைக்கப்பட்டது. மார்ச், 26ல் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க., தலைமை அறிவித்த தலைவர் வேட்பாளர் கீதாவை, பிற கவுன்சிலர்கள் முன்மொழியவில்லை. அதேசமயம் அவரை எதிர்த்து களமிறங்கிய மாவட்ட மகளிரணி அமைப்பாளரான பாண்டி யம்மாள், தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து இரண்டு முறை துணைத்தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதிலும் கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக, டவுன் பஞ்., துணை தலைவருக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதிலாவது துணை தலைவர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது மீண்டும் ஒத்தி வைப்பு நாடகம் அரங்கேறுமா? என்று, டவுன் பஞ்., கவுன்சிலர்கள் உள்பட மக்களே எதிர்பார்த்துள்ளனர்.
தாத்தாவை பார்க்க சென்ற
21 வயது பேத்தி மாயம்
சத்தியமங்கலம், மே 25-
தாளவாடி அருகே, தாத்தாவை பார்க்க சென்ற பேத்தி மாயமானார்.
தாளவாடி அருகே திகினாரையை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ஜோதி, 21; கெட்டவாடியிலுள்ள தாத்தாவை பார்க்க சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு, தாளவாடி போலீசில் நாராயணன் புகாரளித்துள்ளார். இதன்படி போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
கோவில் கடைகள் ஏலம்
2வது முறையாக ரத்து
ஈரோடு, மே 25-
கஸ்துாரி அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான கடைகளின் ஏலம், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவில் முன்புள்ள, 12 கடைகளை நடத்த பொது ஏலம் கடந்த,௪ம் தேதி நடந்தது. அறநிலையத்துறை, 5.௯௦ லட்சம் ரூபாய் அடிப்படை ஏலத்தொகை நிர்ணயித்தது. ஏலத்தில், 6.30 லட்சம் வரை கோரினர். இதனால் அதிக தொகையை எதிர்பார்த்து டென்டர் பெட்டி திறக்கப்பட்டது. இதில், 7.19 லட்சம் ரூபாய் டென்டர் கோரப்பட்டிருந்தது. ஆனால் ஏலதாரர் தொகையை செலுத்த வில்லை. இதனால் உரிய கால அவகாசத்துக்கு பின் ரத்தானது. இந்நிலையில் கஸ்துாரி அரங்கநாதர் கோவில் மண்டபத்தில், மீண்டும் நேற்று ஏலம் நடந்தது. இதில், 6.12 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இத்தொகைக்கு ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால் பொது ஏலத்தை ரத்து செய்வதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். மீண்டும் ஏலம் நடக்கும் தேதி எதுவும் குறிப்பிடப்பவில்லை.