செய்திகள் சில வரிகளில் கிருஷ்ணகிரி
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விவசாயிகளுக்கு மானியத்தில்
இடு பொருட்கள் வழங்கல்
கிருஷ்ணகிரி, மே 25-
கிருஷ்ணகிரி வட்டாரத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், 200 பண்ணை குடும்பங்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்பத்துக்கு, மூன்று தென்னங்
கன்றுகள் வீதம், 600 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்க, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வரப்பு பயிராக காரமணி பயிரிட, 50 சதவீத மானியத்தில் ஒவ்வொரு பஞ்.,க்கும், 75 கிலோ விதைகள், 5 கைத்தெளிப்பான், 4 மின்கல தெளிப்பான்கள் வினியோகம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தோட்டக்கலை துறை மூலம் மாடித்தோட்ட கிட், 25 ரூபாய் மானியத்தில், 125 பேருக்கு வழங்கப்பட்டன. பழமரக்கன்றுகள் ஒரு நபருக்கு, 8 செடிகள் என்ற வீதம், 6 நபர்களுக்கு வழங்கப்பட்டன. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார், பி.டி.ஓ., சாந்தி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

குழந்தையை தவிக்க
விட்டு ஓட்டம் பிடித்த தாய்
ஓசூர், மே 25-
ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த, 14ல் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவர், தன் பெயர் ஐஸ்வர்யா, 22, கணவர் பெயர் சிலம்பரசன், சொந்த ஊர் வேலுார் மாவட்டம் எனவும், ஓசூர் கொல்லர்பேட்டையிலுள்ள தன் சித்தி வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்திருந்தார். கடந்த, 16ல், 1.570 கிலோ எடையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் வைத்திருந்தனர். குழந்தை பிறந்த சில மணி நேரத்தில், மருத்துவமனையில் இருந்து ஐஸ்வர்யா ஓட்டம் பிடித்துள்ளார். குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் கவனித்து வருகிறது. ஓசூர் டவுன் போலீசார், ஐஸ்வர்யாவை தேடி வருகின்றனர். ஐஸ்வர்யாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை எனக்கூறும் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கூலித்தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை
ஓசூர், மே 25-
கெலமங்கலம் அடுத்த குள்ளட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிசாமி, 50; கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு செல்லாமல், தொடர்ந்து மதுகுடித்து கொண்டிருந்தவர், சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10ம் வகுப்பு கணித தேர்வு
1,344 பேர் 'ஆப்சென்ட்'
தர்மபுரி, மே 25-
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 100 தேர்வு மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுத, 23 ஆயிரத்து, 542 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று, 22 ஆயிரத்து, 198 பேர் மட்டும் தேர்வில் பங்கேற்றனர். இதன்படி, 1,344 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர்.
காங்., கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர், மே 25-
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவை விமர்சித்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மேற்கு மாவட்ட இளைஞர் காங்., சார்பில், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். சீமானுக்கு எதிராக, காங்., கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மேலும், சீமான் உருவப்பொம்மையை தீயிட்டு எரிக்க முயன்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தி உருவபொம்மையை பறித்து விட்டனர். இதையடுத்து, சீமான் படத்துடன் இருந்த பேனரை, பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X