தர்மபுரி, குண்டல்பட்டி கால்நடை மருத்துவ வேளாண் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், 102.5 என்ற எண்ணில் வானொலி பண்பலை இயங்கி வருகிறது. இதில், லாபகரமான கறவை மாடு வளர்ப்பு குறித்து, வயல்வெளி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி வரும் மே, 31 முதல், ஜூன், 23 வரை வாரந்தோறும் வரும் செவ்வாய்
கிழமைகளில் இந்நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில், கறவை மாடு பராமரித்தல், சமச்சீர் தீவனம் தயாரித்தல், வறட்சியை எதிர்கொள்ளும் வழிமுறைகள், நோய் மேலாண்மை, கன்று பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், பால் பொருட்களை மதிப்பு கூட்டுதல், மரபுசார் மூலிகை மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதில், பதிவு செய்ய விரும்புவோர், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, இந்த அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04342 288420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.