கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி பெரு விழாவையொட்டி இன்று மாலை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நடக்கிறது.
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன் கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த, 8ம்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.

அதன்பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். கடந்த 13ல் பூச்சொரிதல் விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 47 பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சாத்தப்பட்டன.
இந்நிலையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனிதநீர் மற்றும் பால்குடம் மூலம் அபிஷேகம் செய்து, சாமி தரிசனம் செய்தனர்.மேலும் பக்தர்கள் கோவிலை சுற்றி அங்கபிரதட்சணமும் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து மாலை காப்பு கட்டுதல் விழா நடந்து.
நேற்று முன்தினம்- திருத்தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். காலை, 7:05 மணியளவில் பக்தர்கள் அம்மன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
வீதிகளில் தேர் வலம் வருவதையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாக நீர் தெளித்து கோலமிட்டு வரவேற்றனர். மேலும் தாம்பூலக் கூடையில் வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
கோவில் அருகே இருந்து புறப்பட்ட தேர், வாங்கல் சாலை, ஆலமரத்தெரு, ஜவகர் பஜார் உள்ளிட்ட தெரு வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.
பக்தர்கள் விரதம் இருந்து வந்து மாவிளக்கு, பால் குடம் எடுத்து வந்து, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்தவகையில் ஏராளமான பக்தர்கள் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் இருந்து புனித நீராடி பால்குடம் எடுத்தும், அலகு குத்தி கொண்டும், அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்து வந்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக் கடனை அம்மனுக்கு பயபக்தியுடன் செலுத்தினர்.
இதேபோல குழந்தை வரம் வேண்டி ஏற்கனவே வழிபாடு நடத்தியவர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கரும்பு தொட்டிலில் குழந்தையை தூக்கி கொண்டு வந்து வழிபாடு செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் நீர்மோர், கம்மங்கூழ், பானகம் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மதியம், 5:15 மணிக்கு கோவிலில் இருந்து, கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லும், நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடக்க உள்ளது. அதை தொடர்ந்து, ஆற்றில் பல்வேறு அமைப்புகள் சார்பில், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. அதையொட்டி, மாரியம்மன் கோவில் மற்றும் அமராவதி ஆற்றுக்கு செல்லும் சாலைகளில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் வரும் ஜூன், 2ல் பஞ்ச பிரகாரம்,
3ல் புஷ்ப பல்லக்கு, 4ல் ஊஞ்சல் உற்சவம், 5ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X