புதுப்பாளையம் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உலக சமுதாய சேவா சங்கத்தின் சார்பில், கிராமிய சேவைக் திட்டத்தில், பள்ளிபாளையம் அருகே புதுப்பாளையம் கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள பொதுமக்கள் ஆரோக்கியம் வாழ்வு என்ற நோக்கத்துடன், அவர்களுக்கு உடற்பயிற்சி, தியானம், மற்றும் அகத்தாய்வு பயிற்சிகள் தொடர்ந்து, ஐந்து மாதங்கள் இலவசமாக கற்று கொடுக்கப் படுகிறது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் பயிற்சிக்கு வந்த அனைவருக்கும், இந்த சேவை திட்டத்தில், பஞ்., தலைவர் ரவி மரக்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் மனவளக்கலை அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.