எலச்சிபாளையம் அருகே உள்ள பெரியமணலி கிராம பஞ்., அலுவலகம் முன் இ.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், பெரியமணலி பஸ்நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். பஸ் நிறுத்தத்தில் பெண்கள் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
அத்திக்காடு தார்ச்சாலையை சரிசெய்ய வேண்டும். அச்சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஜேடர்பாளையம் அண்ணாநகர் பகுதியில் தெருவிளக்கு, சிமெண்ட் சாலை, குடிநீர் வசதி, பெண்கள் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என்பது உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின், கிராம பஞ்., தலைவர்
சேகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், ஒன்றிய செயலாளர் அன்புமணி, ஒன்றிய கமிட்டி உறுப்பினர் யுவராஜ், கிளைச்செயலாளர் சோலையப்பன், ஜேடர்பாளையம் கிளைத்தலைவர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.