பள்ளிபாளையம் அருகே எளையாம்பாளையம் பகுதி யில், தடுப்பணை தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளதால், மழை
நீர் வீணாகி செல்வது, விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் விவசாயிகள் கூறியதாவது: எளையாம்பாளையம் பகுதி விவசாயத்துக்காக, பாசன உபரி நீர் மற்றும் மழைநீர் சேமிக்கும் வகையில், கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன், இப்பகுதியில் செல்லும் கிளைவாய்க்கால் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டது.
இதில் தண்ணீர் தேக்குவதால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் அதிகரித்து, தீவனம் மற்றும் காய்கறி சாகுபடிக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன், தடுப்பணையின் பக்கவாட்டில் சுவர் சேதமடைந்து விட்டதால், மழை பெய்தாலும், தண்ணீர் சேமிக்க முடியாமல் வெளியேறி, வீணாக செல்கிறது.
கடந்த ஒரிரு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்தும், தடுப்பணை சேதமடைந்துள்ளதால், தண்ணீர் தேங்காமல், பயனில்லாமல் போய்விட்டது. எனவே, தடுப்பணை தடுப்புச் சுவரை சீரமைத்து, தண்ணீர் சேமிக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.