மல்லசமுத்திரம் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தில் இருக்கும் ஓங்காளியம்மன், செல்வமுத்து மாரியம்மன் கோவிலில், கடந்த, 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
இன்று இரவு அம்மை அழைப்பு நடைபெறும். நாளை மாலை, 5 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. அத்துடன் அலகு குத்துதல், அக்னிகரகம் எடுத்தல், பூங்கரகம், வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும் 27ல், அதிகாலை, 4 மணிக்கு ஓங்காளியம்மன் பெரும்பூஜை, 4.30 மணியளவில் செல்வமுத்து மாரியம்மன் மாவிளக்கு ஊர்வலம், பொங்கல், பெரும் பூஜை, 6 மணிக்கு கும்பம் எடுத்து விடுதல் நடைபெறும். 28ம் தேதி மறுஅபிஷேகம், மஞ்சள் நீராட்டம் நடந்து, 29ம் தேதி பொட்டுசாமி பொங்கல் வைத்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.