செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் முன்னிட்டு, அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று, நாளை மின் நிறுத்தம் செய்யப்படும், கரூர் மின்வாரியம் செயற்பொறியாளர், கணிகைமார்த்தாள் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
உப்பிடமங்கலம் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியேகாம் கொடுக்கப்படும், வேலாயுதம்பாளையம் பீடரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் கோவில் தேரோட்டம் இன்று, நாளையும் நடக்கிறது. இதை முன்னிட்டு கருப்பம்பாளையம், லிங்கத்துார், உப்பிடமங்கலம், சின்னாக்கவுண்டன் புதுார், கருநல்லியாகவுண்டனுார் உப்பிடமங்கலம் தெற்கு கேட், சின்னாக்கவுண்டனூர் கிழக்கு, சின்னாக்கவுண்டனூர் மேற்கு, புதுரெங்கபாளையம், பழைய ரெங்கப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் தடைசெய்யப்படும்.
இவ்வாறு, அவர், தெரிவித்தார்.