நாமக்கல் என்.சி.எம்.எஸ்.,சில் நடந்த ஏலத்தில், 65 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் பகுதியில் இருந்தும், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், 1,800 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அதில், ஆர்.சி.ெஹச்., ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு, 10 ஆயிரத்து 869 ரூபாய் முதல், 13 ஆயிரத்து, 869 ரூபாய் வரையிலும், டி.சி.ெஹச்., ரகம், 10 ஆயிரத்து, 900 ரூபாய் முதல், 13 ஆயிரத்து, 222 ரூபாய் வரையிலும், கொட்டு மட்ட ரகமானது, 5,699 ரூபாய் முதல், 8,999 ரூபாய் வரை ஏலம் போய், பருத்தி மூட்டைகள் மொத்தம், 65 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.