மத்திய அரசு பெட்ரோல் விலையை மேலும் குறைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


''மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு வரியை குறைக்கும்போது, மாநில அரசின் வரியும் குறையும். மத்திய அரசு இன்னும் விலையை குறைக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சேலம் மாவட்டம், ஆத்துார், செல்லியம்பாளையத்தில், தி.மு.க., சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமை வகித்தார். அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த, 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் அனைத்து துறைகளிலும் பாதாளத்தில் சென்றதால், முதல்வர் பொறுப்பேற்கும்போது ஒருவித தயக்கம் இருந்தது. 6 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆனால், நிதி நெருக்கடியில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது.
இயற்கையும் ஆதரவு
அ.தி.மு.க., ஆட்சியில், 2020ல் மட்டும் மேட்டூர் அணையில் ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதே நாளில் தண்ணீர் திறக்க திட்டமிருந்த நிலையில், இயற்கை, தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதால் மழை பெய்து வருகிறது. பாசனத்துக்கு முதல்முறை, மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்ல, 80 கோடி ரூபாயில் கால்வாய் துார் எடுக்கும் பணி நடக்கிறது. கடந்தாண்டில், 4.90 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சியாக, தி.மு.க., உள்ளதாக சிலர் அவதுாறு பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க., ஒருபோதும் ஆன்மிகத்துக்கு எதிராக இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை. அறநிலையத்துறையில், 2,500 கோவில் சொத்துகள், தி.மு.க., ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன. தவிர, 10 கல்லுாரிகள் தொடங்கப்பட உள்ளன. நான் இலக்கை நோக்கி செல்வதால் தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை.
அரசை விமர்சித்து அறிக்கை விடும், முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவரது ஆட்சியில், அவர் தொகுதி மக்களுக்கு கூட எதுவும் செய்யவில்லை. அவரது தொகுதியில், தி.மு.க., நடத்திய வேலைவாய்ப்பு முகாமுக்கு, 10 ஆயிரம் பேர் மனு அளித்தனர். அ.தி.மு.க., ஆட்சியில் சாலைகள் மட்டும் அமைக்கப்பட்டன. அதுவும் ஏற்கனவே அமைக்கப்பட்டவையே.
ஜவுளி பூங்கா
சேலத்தில் ஜவுளி பூங்கா, கொங்கணாபுரத்தில் தொழிற்பேட்டை, மேட்டூர் அணை உபரிநீர் திட்டம், உழவர் கூட்டுறவு சங்கம் என, எந்த கோரிக்கைகளையும் பழனிசாமி நிறைவேற்றவில்லை. பொள்ளாச்சி பாலியல் குற்றம், துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற வேதனையான செயல்கள் தான் நடந்தன. தொழில் வளர்ச்சியை அதிகரிக்க, சேலம் மாவட்டத்தில் விரைவில் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. 25 கோடி ரூபாயில் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்; கருப்பூரில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பணி தொடங்கும்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, லிட்டர் பெட்ரோல், 3 ரூபாய் குறைத்தோம். இதன் மூலம், 1,160 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், அவை மக்களுக்கான சலுகையாக அரசு ஏற்றது. மாநில அரசின் முழு வரியையும், மத்திய அரசு சுரண்டி தின்றுவிட்டது. மத்திய அரசு வழங்க வேண்டிய, 21 ஆயிரத்து, 760 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை வழங்கவில்லை. தி.மு.க., மீது எத்தனை விஷ பரப்புரை செய்தாலும் ஒருபோதும் வீழ்த்த முடியாது. திராவிட மாடல் யாரையும் பிரிக்காது. அனைவரையும் ஒன்று சேர்க்கும்.
நிதி நெருக்கடி
மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு வரியை குறைக்கும்போது, மாநில அரசின் வரியும் குறையும். பா.ஜ., ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் பார்த்தால், மத்திய அரசு இன்னும் விலையை குறைக்க வேண்டும். பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியில் தான் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. சுயமரியாதை, மாநில சுயாட்சியை திராவிட மாடல் ஆட்சிதான் நிறைவேற்றியுள்ளது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், சிவசங்கர், சேலம் எம்.பி., பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெள்ளி செங்கோல் வழங்கல்
சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர்களான, (கிழக்கு) சிவலிங்கம், (மேற்கு) செல்வகணபதி ஆகியோர் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு, 15 அடி உயர செங்கோல் வழங்கப்பட்டது. அதேபோல் கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி, 5 அடி உயரத்தில் வெள்ளி செங்கோல் வழங்கினார். ஆத்துார் நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, ஒன்றிய கவுன்சிலர் பத்மினிபிரியதர்ஷினி, மகளிருக்கு இலவச பஸ் பயணம் வழங்கியதற்கு, வெள்ளி தட்டை பரிசாக வழங்கினர்.
தனி விமானத்தில்...
சேலம் மாவட்ட நிகழ்ச்சிகளுக்காக நேற்று முன்தினம் சென்னையிலிருந்து தனி விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தார். நேற்று ஆத்துாரில் கூட்டத்தை முடித்துக்கொண்டு, மாலை, 5:30 மணிக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் விமானத்தில் சென்னை புறப்பட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X