'போதை'யில் ஏற்பட்ட தகராறில், கட்டையால் தாக்கியதில் மகன் உயிரிழந்தார். தலைமறைவான தந்தையை போலீசார் தேடுகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, ரத்தினவேல் காட்டை சேர்ந்த, தறித்தொழிலாளி சுப்ரமணி, 67. இவரது மனைவி, சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் மணி, 37. இவர், தறித்தொழில், சமையல் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால், தந்தையுடன் வசித்துவந்தார்.
நேற்று முன்தினம் இரவு, தந்தை - மகன், வீட்டில் மதுபோதையில் இருந்தனர். அப்போது, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கையால் மகன் தாக்கியதில், சுப்ரமணிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர், கட்டையால் மகனை தாக்கினார். அதில், அவர் சம்பவ இடத்தில் பலியானார். ஆட்டையாம்பட்டி போலீசார், தலைமறைவான சுப்ரமணியை தேடுகின்றனர்.