வன்கொடுமையால் சிறுமி கர்ப்பம்காரணமான இருவருக்கு 'ஆயுள்'
Added : மே 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

புதுக்கோட்டை:ஆவுடையார்கோவிலில், 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில், ஆயுள் தண்டனை, தலா, 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்த்திபன், 34; அதே பகுதியைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்த, 30 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.முதல் கணவனுக்கு பிறந்த, 17 வயதான சிறுமியை, பார்த்திபனும், சிறுமியின் பெரியப்பா மகனான வெங்கடேசன், 25, என்பவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.சிறுமி, 7 மாத கர்ப்பமாக இருந்த போது, அவரது தாய்க்கு இது தெரிய வந்தது. சிறுமியிடம் விசாரித்த போது, பார்த்திபனும், வெங்கடேசனும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது.இது தொடர்பாக, சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.சிறுமியிடம் டி.என்.ஏ., பரிசோதனை செய்த போது, கர்ப்பத்துக்கு காரணம் வெங்கடேசன் எனத் தெரிய வந்தது. இதையடுத்து பார்த்திபன், வெங்கடேசன் ஆகியோரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, நேற்று தீர்ப்பு வழங்கினார்.பார்த்திபன், வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், தலா, 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, அரசு தரப்பில், நான்கு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X