சென்னை: பதிவுத் துறை பணிகளை மேம்படுத்தும் வழிகளை தெரிவிக்க, பணியாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் கட்டுரை போட்டி, விளம்பர வாசகம் எழுதும் போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கான தலைப்புகள்: பதிவுத் துறையுடான அனுபவத்தை இனிமையாக்குவது எப்படி?, துறை செயல்பாடுகளை மேம்படுத்துவது எப்படி?, மக்கள் மத்தியில், பதிவுத்துறை குறித்து நிலவும் குறைகளை நீக்குவது எப்படி? , இந்த தலைப்புகளில், தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரை போட்டி நடத்துவதற்கான பணிகளை, பதிவுத் துறை பயிற்சி நிலையம் துவக்கி உள்ளது. மண்டல மற்றும் மாவட்ட வாரியாக போட்டிகளை நடத்த, பதிவு டி.ஐ.ஜி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.