''கரூர் தொகுதி மக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி கூறினார்.
கரூரில்
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து, நாம்
தமிழர் கட்சி தலைவர், சினிமா டைரக்டர் சீமான் பேசியதற்கு, நான் பதில்
சொல்லி இருந்தேன். அதற்கு, நேர்மையாக பதில் சொல்ல முடியாத சீமான், என்னை
தனிப்பட்ட முறையில் ஆபாசமாக, வக்கிரமாக விமர்ச்சித்துள்ளார்.
நான்
சீமான் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு, நடிகை விஜயலட்சுமி கூறியது தான்.
அதில், உண்மை இல்லையென்றால், விஜயலட்சுமி மீது சீமான் நீதிமன்றத்தில் ஏன்
வழக்கு போட வில்லை.
சீமான் மீது பல ஆண் தலைவர்கள், பாலியல்
குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து சீமான் பேசவில்லை. நான்
பெண் என்பதால், 'நான் கையை பிடித்து இழுத்தேனா, வா' என, சீமான் பேசுகிறார்.
பின்னர், 'தங்கை' என கூறும் சீமான், அவர் மனதில் உள்ள ஆபாசம், வக்கிரமத்தை
வெளி உலகுக்கு காட்டியுள்ளார்.
அரசியலுக்கு வரும் பெண்களை, ஆபாசமாக
பேசினால், அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவர் என, சீமான் போன்றவர்கள்
நினைக்கின்றனர். பா.ஜ., வின், 'பி டீம்' தான் சீமான். இதனால், அவர்
தொடர்ந்து இதை செய்கிறார். கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஓட்டு
போட்டதாக, சீமான் சொல்கிறார்.
அதை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்கு
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக மக்கள் நேர்மையானவர்கள். இலங்கை
தமிழர்கள், தமிழக மக்களை ஏமாற்றி, சீமான் போல உல்லாச வாழ்க்கை வாழவில்லை.
பா.ஜ., நிர்வாகி ராகவனின் வீடியோ வந்த போது, அதை ஆதரித்தவர் சீமான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'இரட்டை இலையில் சாதனை'
கரூரில்
நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜோதிமணி, ''கரூர் தொகுதியில்
இரட்டை இலை சின்னத்தில், நான்கு லட்சத்து, 20 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்று
வரலாற்று சாதனை படைத்தோம்,'' என, மாற்றி பேசினார். தொடர்ந்து, முதல்வர்
ஸ்டாலின், பேரறிவாளன் சந்திப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல்
நழுவி சென்றார்.