மாநகராட்சி பணியாளர்களிடம் பேச  'சமரச குழு' அமைப்பு  | மதுரை செய்திகள் | Dinamalar
மாநகராட்சி பணியாளர்களிடம் பேச  'சமரச குழு' அமைப்பு 
Added : மே 26, 2022 | |
Advertisement
 

மதுரை, :மதுரை மாநகராட்சி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30ல் தொடர் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதால் பேச்சு வார்த்தை நடத்த சமரச குழு அமைக்கப்பட்டது. முனிச்சாலை மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் உதவி கமிஷனர் சுரேஷ், நகர்நல அலுவலர் ராஜா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யூ., மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், வி.சி.க., துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு சங்க அமைப்பாளர் பூமிநாதன், தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் அம்சராஜ், பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது: கொரோனா நிவாரணம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி தினக்கூலி துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மே 30ல் தொடர் வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம். பேச்சுவார்த்தைக்கு மாநகராட்சி சமரச குழுவை அமைத்துள்ளது. மே 28, 29க்குள் குழுவினர் தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர், என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X