தனிப்படை எஸ்.ஐ., சஸ்பெண்ட்
மதுரை: மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தனிப்படை எஸ்.ஐ., ஆனந்த். இவர் 2020ல் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த வழக்கில், சில ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் இருப்பதாக தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க்கிற்கு புகார் வந்தது. விசாரணைக்கு பின் அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார். துறை ரீதியான விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி நியமிக்கப்பட்டுள்ளார்.-பேக்கரியில் திருட்டுமேலூர்: அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை மாவட்டம் தேவபட்டு சாத்தப்பன் 30, துாங்கினார். நள்ளிரவு 2:00 மணிககு கடைக்குள் சத்தம் கேட்டு எழுந்தார். ெஹல்மெட் அணிந்திருந்தவர் ரூ.3 ஆயிரம் மற்றும் ஒரு அலைபேசியை எடுத்து தப்பினார். சாத்தப்பன் விரட்டியதால் டூ வீலரை விட்டுவிட்டு தப்பினார். மேலுார் போலீசார் டூ வீலரை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.-நகை பறிப்புமதுரை: மீனாம்பாள்புரம் சாந்தி 59. நேற்றுமுன்தினம் இரவு வீட்டருகே வந்தபோது 2 பேர், பத்து பவுன் நகை, அலைபேசியை பறித்துச் சென்றனர். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவர் தற்கொலை திருமங்கலம்: கிழவனேரி ராமராஜ் மகன் ராஜதுரை 21. கப்பலூர் மதுரை காமராஜ் பல்கலை உறுப்புக் கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம் இவரது அலைபேசி மாயமானது. பெற்றோர் கண்டிப்பர் என்ற பயத்தில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.5 பவுன் திருட்டு திருமங்கலம்: உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாம் ராஜா மனைவி ரமணி 32. நேற்று முன்தினம் இரவு இவரது தாயார் கீழே விழுந்ததால் வீட்டை பூட்டாமல் அவரை பார்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.நகை திருட்டுதிருமங்கலம்: அண்ணா நகர் ராணுவ வீரர் ராமு 35. -காஷ்மீரில் பணிபுரிகிறார். இவரது மனைவி சுந்தர லேகா 29, தையல் வகுப்பிற்காக சென்று வந்த நிலையில் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.1200 கிலோ ரேஷன் அரிசியுடன் கைதுதிருமங்கலம்: மதுரை காமராஜர் ரோடு வீரபத்திரன் 33. திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றார். திருமங்கலம் நகர் போலீசார் சோதனையில், 24 மூடைகளில் பதுக்கப்பட்டிருந்த 1200 கிலோ அரிசியை பறிமுதல் செய்து, வீரபத்திரனை கைது செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது அலங்காநல்லுார்: எஸ்.ஐ., மீனாட்சிசுந்தரம் மற்றும் போலீசார் மதுரை ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது டூவீலரில் விற்பனைக்காக ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் வந்த சிக்கந்தர் சாவடி ஆலன் பெட்ரிக் 22, ரயிலார் நகர் தேவ் ஆனந்த் 21, கோவில்பாப்பாகுடி கார்த்திக்கை 27, கைது செய்து கஞ்சா, ரூ.8000 மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.குண்டாசில் வாலிபர் கைதுமதுரை: மதுரை பாசிங்காபுரம் விசால் நகரைச் சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார் (எ) சேட்டன் 24. கொலை, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது இருப்பதால் இவரை குண்டாசில் கைது செய்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டதால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சாராயம் பதுக்கிய இருவர் கைதுஉசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கவணம்பட்டி பகுதியில் சாராயம் பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலில் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். சிவமணி 63, ஆண்டி 60 ஆகியோர் பதுக்கி வைத்திருந்த 200 மில்லி மதிப்பிலான 52 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கள்ளச்சாராயமா என விசாரணை நடத்தியதில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.