410 மாணவர்களுக்கு 'நீட்' சிறப்பு பயிற்சி : தமிழில் கையேடு | மதுரை செய்திகள் | Dinamalar
410 மாணவர்களுக்கு 'நீட்' சிறப்பு பயிற்சி : தமிழில் கையேடு
Added : மே 26, 2022 | |
Advertisement
 



மதுரை,மதுரையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 410 மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.மாவட்டத்தில் ஆங்கிலம், தமிழ் வழியில் இத்தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி, மருத்துவ ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் தகுதி பெற்ற மாணவர்கள் உட்பட 410 பேருக்கு 'நீட்' பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் 'ஸ்கிரீன் டெஸ்ட்' அடிப்படையில் தேர்வு பெற்ற 175 மாணவிகள், 50 மாணவர்களுக்கு 49 நாட்கள் உண்டு, உறைவிடப் பயிற்சி இன்று (மே 26) துவங்கி ஜூலை 13 வரை நடக்கவுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது: தங்கி படிப்போர் உட்பட பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் பயிற்சி, தேர்வுகள் நடத்தப்படும். அதிக மதிப்பெண் பெற இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களுக்கு என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டம், முந்தைய நீட் தேர்வு வினாத்தாட்களை ஒப்பிட்டு தமிழ், ஆங்கிலத்தில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. நீட் தமிழ் கையேடு தயாரிப்பில் மதுரை கல்வித்துறை புதிய முயற்சி எடுத்துள்ளது. இந்தாண்டு 100 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தகுதி பெற முயற்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X