பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பள்ளி செல்லா மாணவர் குறித்த கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.ஒருங்கிணைந்த கல்வி சார்பில், ஆண்டுதோறும் பள்ளி செல்லா மாணவர் மற்றும் மாற்றுத்தினறாளி மாணவர் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. நடப்பாண்டுக்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளன.அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதில், கிராமம், நகரப்புறங்களில், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கல்விக்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்கின்றனர்.பள்ளி செல்லா, இடைநிற்ற மாணவர்களை கண்டறிந்தல், பள்ளியே செல்லாத குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடை நிற்கும் குழந்தைகள் என கணக்கெடுக்கப்படுகிறது.வடக்கு ஒன்றியத்தில், 112 மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கிறது. தெற்கு ஒன்றியத்தில், 141 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பள்ளிக்கு அதிக நாட்கள் வராத மாணவர் குறித்த பட்டியல் தயாரித்து, அவர்களை கண்டறியும் பணி நடக்கிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.