ஸ்தலசயனர் கோவில் செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'
Added : மே 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் செயல் அலுவலரை, அறநிலையத் துறை நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது.
மாமல்லபுரத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 பேருக்கு அன்னதானம் வழங்க, துறை நிர்வாகம் அனுமதித்துள்ளது.அதற்கேற்ப, 50 பேர் அமர்ந்து உணவு சாப்பிட மேஜை, இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
70 -- 80 பக்தர்கள் சாப்பிட வந்தால், கடைசியாக வருவோர், பசி கருதி, தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.இந்நிலையில், இம்மாதம் 21ம் தேதி, கோவிலுக்கு வந்த திருப்போரூர் வி.சி.,- - எம்.எல்.ஏ., பாலாஜி, மேஜை இருக்கையிலும், தரையிலும் அமர்ந்து, பொதுமக்கள் அன்னதானம் சாப்பிட்டதை கண்டார்.இது குறித்து, கோவில் மேலாளர் சந்தானத்திடம் கேட்டார்.

துறை அனுமதித்துள்ள, 50 பேருக்கும் கூடுதலாக வருவோர், பசி அவசரம் கருதி, அவர்களே விரும்பி தரையில் அமர்ந்து சாப்பிடுவதாக, மேலாளர் விளக்கினார்.
மேலும், தனியார் நிறுவனத்தினர், 200 பேருக்கு அன்னதானம் வழங்கவும், அதற்கேற்ப அன்னதான கூடம், மேஜைகள், இருக்கைகள் வழங்க நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.சில ஊடகத்தினர், கோவில் நிர்வாகம், நரிக்குறவர்களை தரையில் அமர வைத்து அவமானப்படுத்தியதாகவும், மேலாளரை எம்.எல்.ஏ., கண்டித்ததாகவும் செய்தி வெளியிட்டனர்.
இச்சூழலில், உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், நேற்று முன்தினம், தரையில் அமர்ந்து சாப்பிட்ட நரிக்குறவர் உள்ளிட்டோரிடம் விசாரித்தார். விரும்பியே சாப்பிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், செய்தி வேறு விதமாக பரவியதைஅடுத்து, ஆணையர் உத்தரவின்படி, இணை ஆணையர் வான்மதி, ஸ்தலசயனர் கோவில் செயல் அலுவலர் சிவசண்முக பொன்மணியை 'சஸ்பெண்ட்' செய்தார்.ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், கூடுதல் பொறுப்பில், கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.


 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X