முடிச்சூர் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகள் 6 மாதத்திற்குள் அகற்ற- தீர்ப்பாயம் உத்தரவு
Added : மே 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை:முடிச்சூர் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செங்கல்பட்டு கலெக்டருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பெரிய ஏரி மதகுகள் மற்றும் கலங்கலை சீரமைக்காமல், பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது தொடர்பான செய்தி, கடந்த ௨௦௨௦ல் நம் நாளிதழில் வெளியானது.இதன் அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது. தீர்ப்பாயம் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கூட்டுக்குழு, அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:முடிச்சூர் பெரிய ஏரியின் கரைகள், உபரி நீர் வெளியேறும் வாய்க்கால்களை பலப்படுத்த, அரசிடம் இருந்து தேவையான நிதியை பெற்று, ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரியின் மதகுகள் உள்ளிட்ட பிற கட்டமைப்புகளை பராமரிக்கவும், களைகளை அகற்றி அவ்வப்போது ஏரியை துார் வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க, ஏரியின் கரைகளில் மரங்களை நட்டு, உயிர்வேலி அமைக்க வேண்டும். இதன் வாயிலாக மண் அரிப்பு தடுக்கப்பட்டு, பசுமை பரப்பும் அதிகரிக்கும். சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை நீர்நிலைகளில் விடுபவர்கள், குப்பையை கொட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
நீர்வளத் துறையுடன் இணைந்து, ஆக்கிரமிப்புகள் குறித்து, புதிய கணக்கெடுப்பு நடத்தி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை, ஆறு மாதங்களுக்குள், செங்கல்பட்டு கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க, பாதாளச் சாக்கடை, 'பயோ மைனிங்' முறையில் குப்பையில் இருந்து உரம் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் எடுக்க வேண்டும்.இதை சுற்றுச்சூழல் துறை செயலரும், தலைமை செயலரும் கண்காணித்து, தேவையான நிதி, தொழில்நுட்ப உதவிகளை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X