தரமான உணவுப்பொருட்கள் விற்பனை கண்காணிக்க சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல் | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
தரமான உணவுப்பொருட்கள் விற்பனை கண்காணிக்க சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
Added : மே 26, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி:உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு போலீஸ், உணவு பாதுகாப்பு துறை மற்றும் எடை அளவு ஆகிய துறைகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
சம்பத் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., ரட்சனாசிங், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன், எடை அளவுகள் துறை ஆய்வாளர் தேவதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் அளவீட்டிலும், தரத்திலும் தவறு நடக்காமல் தடுப்பது.தரமான மீன், இறைச்சி விற்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது, துரித உணவகங்கள், ஓட்டல்களில் உணவின் தரம், மளிகை கடையில் விற்கப்படும் பொருட்களின் தரம், எடை சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது.இதுதொடர்பாக விரைவில் திடீர் கள ஆய்வுகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X