செஞ்சி:செஞ்சி பஸ் நிலையத்தை 6.74 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
செஞ்சியில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் பஸ் நிலையத்தை விரிவக்கம் செய்ய உள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.சப் கலெக்டர் அமித் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், தாசில்தார் பழனி, டி.எஸ்.பி., பிரியதர்ஷினி, துணைச் சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், சந்திரா, லட்சுமி, அஞ்சலை, கார்த்திக், சீனிவாசன், சங்கீதா, சுமித்ரா, ஜான்பாஷா, சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.பேரூராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி செயல்மணி நன்றி கூறினார்.