சீட்டு பணம் தர மறுத்தவரின்வீட்டு முன் உண்ணாவிரதம்
Added : மே 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே சீட்டு பணத்தைத் தர மறுத்தவரின் வீட்டின் முன் சீட்டு கட்டியவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 36; இவரிடம் 23 பேர் மாத சீட்டு பணம் கட்டி வருகின்றனர். முதிர்வு நாட்கள் முடிந்தும் சீட்டு பணத்தை கட்டியவர்களுக்கு தராமல் வெங்கடேசன் காலம் கடத்தி வந்தார்.இதனால், அதிருப்தியடைந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 48; அவரது மனைவி ராஜலட்சுமி, 37; மற்றும் சீட்டு பணம் கட்டிய பாவாடை, 68; அவரது மனைவி அலமேலு, 55; ஆகியோர் வெங்கடேசன் வீட்டின் முன் நேற்று காலை 7:30 மணியளவில் திடீரென அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்து 9:00 மணியளவில் அவர்களை அனுப்பி வைத்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X