திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் அடுத்த பரனுாரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர்கள் சங்கர், மகளிர் திட்டம் காஞ்சனா, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) சிவா, முகையூர் ஒன்றிய தலைவர் தனலட்சுமி உமேஷ்வரன், பி.டி.ஓ.,க்கள் சீனுவாசன், சாம்ராஜ், தாசில்தார் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் பழனியம்மாள் நன்றி கூறினார்.
விக்கிரவாண்டி
காணை ஒன்றியம், அதனுாரில் நடந்த முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். புகழேந்தி எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் இளவரசன் வரவேற்றார்.முகாமில் அமைச்சர் பொன்முடி 171 பயனாளிகளுக்கு 88 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
தனி தாசில்தார் கணேஷ், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், நேர் முக உதவியாளர் வெங்கட சுப்ரமணியன், காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, துணைச் சேர்மன் வீரராகவன், ஒன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன், பி.டி.ஓ., எழிலரசு, வருவாய் ஆய்வாளர் சார்லின், ராஜேஷ், ஊராட்சி தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.