'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், இரு வேளைகளில் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கின் போது, பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு, வாட்ச்கள், டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டன.
காலை அமர்வு:
நேற்று காலை நடந்த கருத்தரங்கில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் மற்றும் வழிகாட்டி குறித்து சிறந்த வாசகம் (ஸ்லோகன்) தந்த கோவையை சேர்ந்த பரத் என்ற மாணவருக்கு டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த அபிதா, விஜயஸ்ரீ, ஜெகதீஸ்வரி, ஜவஹர், சதீஸ் ஆகியோருக்கு வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டன.
மாலை அமர்வு:
நேற்று மாலை நடந்த கருத்தரங்கின் போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில்கள் மற்றும் வழிகாட்டி குறித்து சிறந்த வாசகம் (ஸ்லோகன்) தந்த பொள்ளாச்சியை சேர்ந்த தக்சினேஷ் என்ற மாணவருக்கு டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த லிங்கேஷ், உடுமலையை சேர்ந்த அரவிந்த், கோவையை சேர்ந்த ஜெபராஜ், தீபன், நரூண்கார்த்திக் ஆகியோருக்கு வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டன.இரு அமர்வுகளிலும், பங்கேற்று அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் தெரிவித்தது மட்டுமின்றி, 'தினமலர்' வழிகாட்டி குறித்து சிறந்த வாசகம் (ஸ்லோகன்) தந்த கோவையை சேர்ந்த மாணவி சரண்யாவுக்கு சிறப்பு பரிசாக லேப்டாப் வழங்கப்பட்டது.