திருப்பூர்: தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார், திருப்பூர் அருகே முத்துாரில் நேற்று காலமானார்.
அமைச்சர் சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள், 89, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த முத்துாரில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த தங்கமணியம்மாள் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் காலமானார். அவரது உடல் நல்லடக்கம் இன்று காலை 11:00 மணிக்கு முத்துார் தோட்டத்தில் நடைபெறவுள்ளது.முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.