ஈரோடு மாநகராட்சி சாஸ்திரி நகர் சந்திப்பு பாலத்தில் நுரையுடன் கூடிய சாய, பிளீச்சிங் ஆலை கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியில் பல இடங்களில் சாய, சலவை, பிளீச்சிங் ஆலைகள் அனுமதி இன்றி இயங்குகின்றன. பல ஆலைகள், காலி இடங்கள், வீடுகளில் சாயத்துணி, பிளீச்சிங் செய்யப்பட்ட துணிகளை தொட்டிகளில் அலசி, கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருகின்றனர். இப்பகுதியில் சலவை, பிளீச்சிங் துணிகளே அதிகமாக அலசி கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், ஆசிட் நெடியும் நுரையுமாக சாக்கடை வடிகாலில் செல்கின்றன.
பிளீச்சிங் தண்ணீரால் இப்பகுதியில் ஆசிட் நெடி வீசுவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுபற்றி, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற ஆலைகள் அனுமதி இன்றி செயல்படுவதை தடுப்பதுடன், துணிகள் அலசுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.