பு.புளியம்பட்டி நகராட்சியில் எந்த வேலையும் நடப்பதில்லை: நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் பகிரங்க புகார்
Added : மே 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


'புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் எந்த பணியும் நடைபெறாமல் நகராட்சி நிர்வாகம் மோசமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்' என, தி.மு.க., கவுன்சிலர்கள் பகிரங்கமாக புகார் தெரிவித்தனர்.
புன்செய் புளியம்பட்டி நகர் மன்ற கூட்டம் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சக்திவேல், துணைத்தலைவர் சிதம்பரம்
முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
சரோஜா தி.மு.க.,: காந்திநகர் பகுதியில் உள்ள பள்ளத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. சுத்தம் செய்வதே இல்லை. நகராட்சிக்கு போன் செய்தால் எடுப்பதில்லை.
பூர்ண ராமச்சந்திரன் தி.மு.க.,: பொதுமக்கள் கட்டட அனுமதி பெற விண்ணப்பித்து 6 மாதம் ஆகியும் இன்னும் பணி நடக்கவில்லை. நகராட்சியில் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. முறையாக பணி செய்யாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரளிகிருஷ்ணன் தி.மு.க.,: வார சந்தை, பவானிசாகர் சாலை பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் வெளியேறி தேங்குகிறது. சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணைத்தலைவர் சிதம்பரம்: குப்பை கொட்ட இடம் இல்லை என தெரிந்ததும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இடம் தேர்வு செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை. பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நிதி நிலை குறித்து வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்தக் கூட்டத்திற்கு மனவருத்தத்துடன் கலந்து கொள்கிறோம். நகராட்சி நிர்வாகம் சரியான பதில் தெரிவிக்கவில்லை என்றால் அடுத்த கூட்டம் பொதுமக்கள் மத்தியில் பொதுவெளியில்
நடத்தப்படும்.
இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
தலைவர் ஜனார்த்தனன்: நகராட்சி அதிகாரிகளிடம் எந்த விபரம் கேட்டாலும் சரியான பதில் இல்லை. பொதுமக்கள் விண்ணப்பித்துள்ள மனுக்கள் பற்றி கேள்வி கேட்டால் வாயை திறப்பதில்லை. நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தித் தரவேண்டும். இல்லையென்றால் வேறு மாதிரி ஆகிவிடும்.
தலைவர் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் கேள்விக்கு கமிஷனர் சக்திவேல், ' நடவடிக்கை எடுக்கப்படும்; பார்த்துக் கொள்ளலாம்' என, ஒரு வரியில் மட்டும் பதில் அளித்தார்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X