'விடுதலை செய்யுங்களேன்': முதல்வருக்கு கைதி கடிதம்
Added : மே 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை போல, தன்னையும் தமிழக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆயுள் கைதி ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பி உள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில், மதுரை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ரவிச்சந்திரனுக்கு, தி.மு.க., அரசு அமைந்த பிறகு மாதந்தோறும் 'பரோல்' வழங்கப்படுகிறது.தற்போது, அவர் துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சூரப்பநாயக்கன்பட்டியில் தாயாருடன் வசிக்கிறார். அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:நீண்டகாலமாக தமிழக அரசின் ஏழு பேர் விடுதலை முடிவிற்கு இசைவு தராமல் காலம் தாழ்த்திய கவர்னரிடம், மீண்டும் இவ்விவகாரத்தை கொண்டு செல்ல விரும்பாத உச்ச நீதிமன்றம், தன் உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.

இதேபோல தங்கள் தலைமையிலான அரசுக்கும் உள்ளார்ந்த அதிகாரம் உண்டு என சுட்டிகாட்டி மனுக்கள் அனுப்பினேன். எனவே எஞ்சியுள்ள நான் உட்பட ஆறு பேரின் விடுதலை தீர்மானத்தை, தமிழக அரசுக்கே உரிய நிர்வாக ஆணைப்படி என் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
29-மே-202205:49:01 IST Report Abuse
RaajaRaja Cholan கேவலம் , சொல்ல போனால் பேரறிவாளனை மீண்டும் சிறையில் அடைக்க வாய்ப்பிருந்தால் அடைக்க வேண்டும். தவறான முன்னுதாரணம் உருவாக்கப்படுகிறது இங்கே , தூக்கு தண்டனை கைது ,பிறகு மனு கொடுத்து ஆயுள் தண்டனை , பிறகு விடுதலை , பிறகு சுதந்திர போராட்டம் தியாகி போல விடுதலை அடைந்தவுடன் கொண்டாட்டம் . இதை முன்னுதாரணம் ஆக்கி பிற தூக்கு தண்டனை கைதிகள் ?
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
27-மே-202213:53:42 IST Report Abuse
Manguni கொலை குற்றவாளிகளின் சொர்க்கம் தமிழகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X