சென்னை: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், 2026 ஜூன் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், அதிகபட்சம் 7.50 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெறும் வகையிலான, புதிய மருத்துவ காப்பீடு திட்டம், 2018 ஜூலை 1ல் துவக்கப்பட்டது. இத்திட்டம், அடுத்த மாதம் 30ம் தேதி நிறைவடைகிறது.
இந்த திட்டத்தில், ஓய்வூதியதாரர்கள் பங்களிப்பு தொகையாக, 350 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், வரும் ஜூலை 1 முதல் 2026 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்போதைய திட்டத்தில், குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சைக்கு, 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம்.
ஓய்வூதியர் மற்றும் அவரது மனைவிக்கு, காப்பீடு திட்டத்தில் மருத்துவ உதவி பெறலாம்.இன்சூரன்ஸ் நிறுவனம் நிர்ணயிக்கும் காப்பீடு தொகை, மாதந்தோறும் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.